விக்ரம் படத்தில் எத்தனை பாடல்கள்?... அனிருத் வெளியிட்ட லிஸ்ட் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும், மத்திய, மாநில அரசுகளை பாடல் வரிகள் மூலம் கமல் விமர்சித்திருக்கிறார் என்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.இந்த விழாவில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட்டை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதன்படி படத்தில், ‘பத்தல பத்தல’, ‘விக்ரம் டைட்டில் ட்ராக்’, ‘வேஸ்டட்’, ‘போர்கொண்ட சிங்கம்...