பொங்கலில் கரப்பான்பூச்சி.. ’ஷாக்’ ஆன வாடிக்கையாளர்! வருத்தம் தெரிவித்த பிரபல உணவகம்!
பொங்கலில் கரப்பான்பூச்சி.. ’ஷாக்’ ஆன வாடிக்கையாளர்! வருத்தம் தெரிவித்த பிரபல உணவகம்! கடலூரில் செயல்படும் பிரபல உணவகத்தில் சேஷாத்திரி என்பவர் பொங்கல் ஒன்று பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் போய் திறந்து பார்த்தபோது அதில் கரப்பான்பூச்சி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மீண்டும் ஹோட்டலில் வந்து கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. இது சம்பந்தமாக புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது தவறு நடந்தது உண்மைதான் என உணவக ஊழியர்கள் ஒத்துக்கொண்டனர். மேலும் உணவகம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் சில இடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தியதுடன், தவறு குறித்து வாடிக்கையாளர்கள் வந்து தெரிவித்தால் உரிய மரியாதை கொடுக்க வேண்டுமெனவும் உணவுத்துறை அதிகாரிகள் உணவக ஊழியர்களிடம் அறிவுறுத்தினர். இனிவரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக சம்பந்தப்பட்ட உணவகத்தினர் ...