தைரியம் இருந்தா இத பண்ணுங்க.. நேரலையில் தைரியமாக பேசிய ஜூலி


தைரியம் இருந்தா இத பண்ணுங்க.. நேரலையில் தைரியமாக பேசிய ஜூலி


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமானவர் ஜூலி. இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது. இந்நிலையில் அதன் பிறகு ஜூலிக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அத்துடன் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக வழக்கு கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்று தன்னுடைய பெயரை மாற்ற முயற்சித்தார்.

ஓரளவு அதிலும் வெற்றி கண்டார். இதனால் இவருக்கு ஆதரவாக ஒரு சில ரசிகர்கள் தற்போது பேசி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஜூலியை பற்றி பல கேள்விகள் கேட்டு வந்தனர். அதில் ஒவ்வொன்றாக ஜூலியும் பதிலளித்து வந்தார். அப்போது சில ரசிகர்கள் ஜூலியை கேலி செய்யும் விதமாக பல கமெண்டுகள் செய்து வந்துள்ளனர்.

அதைப் பார்த்த ஜூலி அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தைரியம் இருந்தால் உங்களுடைய ஒரிஜினல் முகம் உள்ள போட்டோவை வையுங்கள். அதற்குக் கூட உங்களுக்கு தைரியம் இல்லை அடுத்தவர்களை கேலி செய்ய வந்து விட்டீர்கள் என ஜூலி கேட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இதை தொடர்ந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து தான் வியந்ததாகவும், மேலும் இந்த படக்குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ஜூலி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Related Topics:, , , , , ,

Comments

Popular posts from this blog

The California 395 Corridor Should be on Everyone rsquo s Bucket List #Bucket

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325