விக்ரம் படத்தில் எத்தனை பாடல்கள்?... அனிருத் வெளியிட்ட லிஸ்ட்


விக்ரம் படத்தில் எத்தனை பாடல்கள்?... அனிருத் வெளியிட்ட லிஸ்ட்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. 

இப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும், மத்திய, மாநில அரசுகளை பாடல் வரிகள் மூலம் கமல் விமர்சித்திருக்கிறார் என்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

Vikram

இதற்கிடையே, படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.இந்த விழாவில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட்டை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதன்படி படத்தில், ‘பத்தல பத்தல’,  ‘விக்ரம் டைட்டில் ட்ராக்’,  ‘வேஸ்டட்’,  ‘போர்கொண்ட சிங்கம்’, ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம்’ ஆகிய ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க | அன்றே கணித்த உதயநிதி- சிவகார்த்திகேயனின் ‘டான்’ வசூல் எவ்வளவு?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325

NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு