பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்2115604074
பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன் லண்டன்: பிரிட்டனில், போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். கொரோனா காலத்தின் போது, சட்ட விரோதமாக மது விருந்து கொடுத்ததாக, பல புகார்கள் அவர் மீது எழுந்தன. இதையடுத்து, அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியில், அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கட்சியினரே தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம், கடந்த மாதம் பார்லிமென்டில் விவாதத்துக்கு வந்தது. முதலில் குற்றங்களை மறுத்த போரிஸ் ஜான்சன், பின் அதை ஒப்புக் கொண்டு, பார்லிமென்டில் மன்னிப்பு கேட்டார். இறுதியில் தீர்மானம் தோல்வியடைந்ததால், போரிஸ் ஜான்சன் பதவி தப்பியது. இருப்பினும், அவருக்கு கட்சியில் எதிர்ப்பாளர்கள் அதிகரித்தனர். இது ஒருபுறம் இருக்க, கட்சியின் துணை தலைமை கொறடாவாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எம்.பி., கிறிஸ் பின்சரை நியமித்தார் போரிஸ் ஜான்சன். மது போதையில