இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்! காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்! காத்திருக்கும் சர்ப்ரைஸ்! தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல், இந்த திட்டம் எப்போது தொடங்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், திமுக அரசால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. எனெனில் கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வருமானம் பெருவாரியாக குறைந்தது. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்...