இந்திய தபால் துறையில் அசத்தல் அறிவிப்பு.. கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
இந்திய தபால் துறையில் அசத்தல் அறிவிப்பு.. கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
இதற்கான அறிவிப்பு இந்த மாதம் 2ம் தேதி வெளியானது. இந்திய தபால் துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அடுத்தமாதம் 05.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கான கல்வித் தகுதி , எப்படி விண்ணப்பிக்க வேண்டும், வயது , காலியிடங்கள் விவரம் உள்ளிட்டவற்றை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://indiapostgdsonline.gov.in. என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய தபால் துறை வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் | No.17-31/2016-GDS | ||||
நிறுவனம் / துறை | இந்திய தபால் துறை | ||||
பணியிட விவரம் | விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம். | ||||
பணிகள் | Gramin Dak Sevak | ||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 02/05/2022 | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05/06/2022 | ||||
சம்பள விவரம் |
| ||||
கல்வித் தகுதி விவரம் | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். | ||||
பிற தகுதிகள் | உள்ளூர் மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். | ||||
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. | ||||
மொத்த காலிப்பணியிட விவரம் | 38, 926 காலியிடங்கள் உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 காலியிடங்கள் உள்ளது. | ||||
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். | ||||
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். | ||||
விண்ணப்ப கட்டணம் | அனைவரும் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். SC/ST/மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. | ||||
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை | ஆன்லைன் online வழிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். |
India Post GDS Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் - indiapostgdsonline.gov.in.
- வேலைக்கான விண்ணப்பத்தை அறிவிப்பினை படித்த பிறகு நிரப்பவும்.
- வேலைக்கான கட்டணத்தை (Fee Payment ) செலுத்த வேண்டும்.
- உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
https://indiapostgdsonline.gov.in/
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment