மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது517824266
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு அமர்வில், இன்று சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை, ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனிடையே, கோவாவில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்றிரவு மும்பை வந்தடைந்தார். கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சொகுசு பேருந்து மூலம் கொலாபா பகுதியில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய சிறப்பு சட்டப்பேரவை அமர்வில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ள நிலையில், தங்கள் கூட்டணிக்கு 170க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய சபாநாயகர் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே-பாஜக கூட்டணி சா...