Monkeypox: உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்; அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்
Monkeypox: உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்; அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவத் தொடங்கி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் சுமார் 12 நாடுகளில், 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சல் காரணமாக பங்களாதேஷ் சுகாதார எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
பங்களாதேஷில் இதுவரை குரங்கு காய்ச்சலின் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தனித்தனியாக ஸ்கிரீனிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உட்பட உலகின் சுமார் 12 நாடுகளில் குரங்கு காய்ச்சல் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் (WHO) கூறுகிறது இந்த நோயைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | Health Alert: அளவுக்கு மிஞ்சிய ஆலுவேரா ஏற்படுத்தும் பாதிப்புகள்
குரங்கு காய்ச்சல் பரவுவது எப்படி
குரங்கு காய்ச்சல் கடுமையாக தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. இது பறவை காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்குகிறது. முதலில் நிணநீர் மண்டலங்களில் வீக்கம் ஏற்படுகிறது, பின்னர் முகம் மற்றும் உடலில் சொறி தோன்றும். பொதுவாக, அதன் தொற்று இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். அதன் தொற்று உடலில் இருந்து வெளியேறும் திரவம், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், போன்றவற்றின் மூலம் பரவலாம்.
நோய்கான அறிகுறிகள்
பெரியம்மை நோயுடன் ஒப்பிடும்போது குரங்கு தொற்று லேசானதாகக் கருதப்படுகிறது. உடலில் கொப்புளங்கள் இருப்பதுடன், காய்ச்சல் பாதிப்பும் இருக்கும். சளி, தலைவலி, தசை வலி, சோர்வு போன்றவை இந்த நோயின் மற்ற அறிகுறிகளாகும். இப்போதைக்கு விழிப்புணர்வோடு இருப்பதன் மூலம் தான் அதைத் தவிர்க்க முடியும். பெரியம்மை தடுப்பூசி இந்த நோயில் 85 சதவீதம் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் குரங்கு காய்ச்சல்
இதுவரை இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை, ஆனால் மற்ற நாடுகளில் பரவுவதைக் கருத்தில் கொண்டு, கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். இது தொடர்பாக ஓரின சேர்க்கையாளர்களுக்கு சிறப்பு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Raw Milk: பசும்பால் குடிப்பது நல்லதா, கெடுதலா; ஷாகிங் உண்மை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Comments
Post a Comment