சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளது: பாலகிருஷ்ணன் பாராட்டு
சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளது: பாலகிருஷ்ணன் பாராட்டு விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல செயல் விளக்க கூட்டம், விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நூல்விலை உயர்வை கண்டித்து 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனையான நூல் தற்போது ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இதனால், தொழிலாளிகள் மட்டுமின்றி முதலாளிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கு காரணம் ஒன்றிய அரசு பெரிய முதலாளிகளுக்கு பஞ்சுகளை, நூல்களை விற்பனை செய்வதே. ஒன்றிய அரசு விற்பனை, ஏற்றுமதிகளை கண்காணித்திடவும், நெறிமுறைப்படுத்திடவும் வேண்டும். தமிழக அரசியல் களத்தில் அதிமுக இனிவரும் காலங்களில் காணாமல் போகும். திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் சிறப்பாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது, ஒரு போலீஸ்காரர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. ...