விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!683970233
விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! விருத்தாச்சலம் : கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விருத்தாச்சலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துக் கொள்வது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில், விருத்தாசலம் ஆயர்மடம் பகுதி மாணவியின் மரணமும் இணைந்துவிட்டது. விருத்தாச்சலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பெற்றோர்கள் இறுதி சடங்கு செய்ய முற்பட்ட போது, காவல்துறையினர் அதிரடியாக மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததால் பரப்பரப்பு நிலவுகிறது....