பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை இன்று தொடக்கம்.!2140893119
பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை இன்று தொடக்கம்.! மதுரை - ராமேஸ்வரம் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்திருந்த நிலையில், இன்று இந்த வழிதடத்தில் ரயில் சேவை தொடங்கியது. மதுரை - ராமேஷ்வரம் இடையில் காலை மாலை என இருவேளைகளாக இயக்கப்பட்ட ரயில் சேவை, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த இரு ரயில்களும் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி மனு கொடுத்திருந்தார். அதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய மதுரை - ராமேஸ்வரம் காலை நேர பயணிகள் ரயில், ராமேஸ்வரம் - மதுரை மாலை நேர பயணிகள் ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி 2 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படும் இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்ப...