ஓசூர் அருகே நடுரோட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்தது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜூஜூவாடியைச் சேர்ந்தவர் சதீஷ் (29). நேற்று காலை ஜூஜூவாடியிலிருந்து தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஸ்கூட்டர் தீப்பிடித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ், உடனடியாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், நடுரோட்டில் வண்டியை போட்டு விட்டு, ஓட்டம் பிடித்தார். சிறிது நேரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர். Tags:
ஓசூர்
விரிவாக படிக்க >>