Posts

KGF 2 Collection: 6 நாட்களின் 600 கோடிக்கும் மேல் வசூலித்த கே.ஜி.எஃப் 2!

Image
KGF 2 Collection Worldwide: கே.ஜி.எப் 2 திரைப்படம் 6 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு சமீபத்தில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது. கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போதைய நிலவரப்படி, கே.ஜி.எஃப் 2... விரிவாக படிக்க >>

பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Image
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014 தொடர்ந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கால்வாய்க்கு உள்ளேயும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு உதவியாக... விரிவாக படிக்க >>

சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.168 குறைந்து சவரன் ரூ. 40,232-க்கு விற்பனை

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 19.04.2022 கனமழை எச்சரிக்கை அறிவிப்பு || Tamilnadu School leave

Image
தமிழகத்தில் 19.04.2022 கனமழை எச்சரிக்கை அறிவிப்பு || Tamilnadu School leave

பிரபலத்திடம் சத்தியம் வாங்கிய ரஜினிகாந்த்.. கெட்ட வார்த்தை பேசினாலும் அதுவும் ஒரு அளவு தான்

Image
ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நடிகர், நடிகைகளை காட்டிலும் இயக்குனரின் உழைப்பு தான் அதிகமாக உள்ளது. இதனால் நடிகர்களிடம் சிறந்த நடிப்பை பெற வேண்டும் என்பதால் சில இயக்குனர்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது தவறு நடந்தால் சில இயக்குனர்கள் கெட்ட வார்த்தை பேசுவது நிறுத்தமாட்டார்கள் அந்த அளவிற்கு கோபம் அடைவார்கள். உதாரணமாக இயக்குனர் பாலா நடிகர், நடிகைகளிடம் கோபமாக பேசுவது அதை காட்டிலும் ஒருபடி மேலாக அடிக்கவும் செய்வார் என்ற செய்திகளும் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் மேடையில் பேசிய ராதாரவி ரஜினிகாந்தை பற்றி வெளிப்படையாகப் பேசினார். ரஜினிகாந்தின்... விரிவாக படிக்க >>

நடிகர் திலீப்பிடம் இருந்த 11 ஆயிரம் வீடியோக்கள்.. அரண்டு போன போலீஸ்!

Image
நடிகையை கடத்தி காருக்குள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில நடிகர் திலீப்பிடம் இருந்து 11 ஆயிரம் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் கடந்த 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடித்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பிரபல நடிகை மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட நடிகையை அந்த கும்பல் காருக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. Aishwarya: சொன்னா கேளு பாப்பா... அடம்பிடிக்காத.. ஐஸ்வர்யாவால் காண்டாகும் ரஜினி ரசிகர்கள்! விரிவாக படிக்க >>

மாசம் 30 ஆயிரம் கரெக்டா மாமூல் வரணும் - விடுதி மேனேஜரிடம் பணம் பறிக்க முயன்ற போலி எஸ்.ஐ

Image
விருகம்பாக்கத்தில் விடுதி மானேஜரிடம் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ. நகரில் நகரில் வசித்து வருபவர் அன்புச்செல்வம்(வயது 39), விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதியில் உள்ள விடுதியில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு விடுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அன்புச்செல்வனிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் என அடையாள அட்டையை காண்பித்துள்ளார். மேலும் விடுதியின் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க மாதம் ரூ.30 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி விட்டு சென்றுள்ளார். Also Read:  தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்திய பிளீச்சிங் பவுடர் விஷவாயுவாக மாறிய விபரீதம்... 3 பேர்... விரிவாக படிக்க >>