தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. தங்கம் விலை, கடந்த 2ம் தேதி புதிய வரலாற்று சாதனை படைத்தது. அதாவது, அன்றைய தினம் சவரன் ரூ.44,040க்கு விற்கப்பட்டது. இந்த வரலாற்று விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து தங்கம் விலை ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அதிரடியாக விலை உயர்வதும், அதன் பிறகு பெயரளவுக்கு குறைவதுமான நிலையும் நீடித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,320க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560க்கு விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,340க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,720க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்