இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்! காத்திருக்கும் சர்ப்ரைஸ்!


இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்! காத்திருக்கும் சர்ப்ரைஸ்!


தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

அந்த வகையில், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல், இந்த திட்டம் எப்போது தொடங்கும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், திமுக அரசால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. எனெனில் கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வருமானம் பெருவாரியாக குறைந்தது. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், நாளை பட்ஜெட் தொடங்குகிறது. அதன்படி, முதல்முறையாக தமிழகத்தில் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டுதாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை நாளை மறுநாள் மார்ச் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

தொடர்ந்து, இந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான திட்டங்கள் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பத்திரப்பதிவு, வணிகவரி, ஆயத்தீர்வை வருவாயை பெருமளவு நம்பியுள்ளது. ஒரே நாடு ஒரேபதிவு முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில், இந்த பத்திரப்பதிவு வருவாய் குறைய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே, இதனை ஈடுசெய்யும் வகையில், வரி வருவாயை பெருக்கும் நோக்கில் புதிய திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், நகைக்கடன் ரத்து, கல்வி கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளும், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த, அறிவிப்பு நிச்சயம் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எனினும், ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

The California 395 Corridor Should be on Everyone rsquo s Bucket List #Bucket

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325