பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!722922325


பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு!


பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் 1500 மாணவர்களைத் தேர்வு செய்து, 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெளியிட்ட அரசானையில்

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாமொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் 1500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 

1500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். அரசுத்தேர்வுத்துறையால் தேசிய திறனறித்தேர்வை போன்றே நடத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும்.தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி:-

இத்தேர்விற்கு 11ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 

மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து  பள்ளித் தலைமையாசிரியரிடம் விண்ணப்பிக்கவேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

09.09.2022

தேர்வு நடைபெறும் நாள்;-

01.10.2022

Comments

Popular posts from this blog