NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு
NRA CET Exam: ஆண்டின் இறுதிக்குள் குரூப் பி,சி பணிகளுக்கான பொது தகுதித் தேர்வு - மத்திய அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் அரசிதழ் பதிவுபெறாத அலுவலர் (நான் - கெஜட்டட் ) பணியிடங்களுக்கான பொது தகுதித் தேர்வு (CET) நடைபெறும் என்று மத்திய பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நேற்று, தேசிய ஆள்சேர்ப்பு முகமை தொடர்பான கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய அமைச்சர், " தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித் தேர்வை நடத்தத் தயாராகி வருகிறது. ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தைக் கொண்டு, வேலை தேடுபவர்களுக்கு எளிதாக பணியமர்த்தும் திட்டமாக இது இருக்கும்"என்று தெரிவித்தார். மேலும், "முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும்" என்றும் கூறினார். பொது தகுதித் தேர்வு: முன்னதாக, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ் சார்பில் பி மற்றும் சி ...
Comments
Post a Comment