Yash’s KGF 2 Movie Live: கேஜிஎஃப் 2 ரிலீஸ்.. உலகளவில் ராக்கி பாய் என்ட்ரியை கொண்டாடும் ரசிகர்கள்!


Yash’s KGF 2 Movie Live: கேஜிஎஃப் 2 ரிலீஸ்.. உலகளவில் ராக்கி பாய் என்ட்ரியை கொண்டாடும் ரசிகர்கள்!


சென்னை: இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.

ராக்கி பாயின் அதிரடியான என்ட்ரி, கோலார் தங்க சுரங்கத்தின் பேக்டராப் கதை என கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் மேட்மேக்ஸ் எஃபெக்டில் ரசிகர்களை மிரட்டியது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் இன்னமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் கேஜிஎஃப் 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்.

06:03 am

கேஜிஎஃப் ஃபர்ஸ்ட் பார்ட் போலவே

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேஜிஎஃப் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் செம என ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

05:59 am

கேஜிஎஃப் 2 படத்தை ஜெர்மனியில் கொண்டாடும் ரசிகர்கள். இப்படியொரு மாஸ்டர்பீஸ் படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

05:41 am

மான்ஸ்டர் வந்துட்டான்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், அதற்கு போட்டியாக கேஜிஎஃப் ராக்கி பாய் மான்ஸ்டர் இன்று வந்துட்டான் என ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

05:40 am

ரியல் பீஸ்ட்

கேஜிஎஃப் 2ம் பாகம் தான் ரியல் பீஸ்ட் என ரசிகர்கள் ராக்கி பாயின் என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்

05:28 am

உலகம் முழுவதும் 10000-க்கும் அதிகமான திரையரங்குகளில் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி உள்ளது.

05:25 am

ராக்கி பாயின் ஆட்டம் ஆரம்பம் என இயக்குநர் பிரசாந்த் நீல் ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்

05:23 am

கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியானது. அதிகாலை 4 மணிக்கு சிறப்பு FDFS காட்சி வெளியானது. யாஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் படத்தை கொண்டாடி வருகின்றனர்

05:10 am

உலகம் முழுவதும் வெளியானது நடிகர் யாஷ்ஷின் கேஜிஎஃப் 2 திரைப்படம்

05:10 am

நடிகர் யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

05:09 am

கர்நாடக, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் வடமாநிலங்களிலும் ரசிகர்கள் ராக்கி பாயை காண ஆவல்

English summary

கர்நாடக, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் வடமாநிலங்களிலும் ரசிகர்கள் ராக்கி பாயை காண ஆவல்

Comments

Popular posts from this blog